Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

சிவாஜியின் ஒரிஜினல் கேரக்டர் என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பலவித கேரக்டர்களில் திரையில் தோன்றி உள்ளார். அவரது ஒரிஜினல் கேரக்டர் குறித்து பத்திரிகையாளர் மணி தெரிவித்து உள்ளார்.

“எந்த அளவுக்கு நடிகராக சிவாஜி ஜெயித்து காட்டினாரோ, அதே அளவுக்கு நல்ல மனிதனாகவும் வாழ்ந்து காட்டினார்.

எத்தனையோ படங்கள் நடித்து, பண செல்வாக்கு இருந்தாலும் வீட்டு சாப்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாராம் சிவாஜி. அதே போன்று எப்போதுமே தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவாராம். நடிகர் நாகேஷ் போன்ற முக்கிய நடிகர்கள் நடு இரவில் வீட்டிற்கு வந்தாலும், அப்போது கூட தோசை ஊற்றி, தேங்காய் சட்னி வைக்க சொல்லி சாப்பாடு கொடுப்பார்.

ம். அவர்களுடனே அமர்ந்து பேசி, தரையில் பாய் போட்டு தூங்குவார்.

அதே போன்று தான் நடித்து கொண்டிருந்த காலம் வரைக்கும், படப்பிடிப்புக்கு 1 மணி நேரத்திற்கு முன்பே சென்று விடும் பழக்கமுடையவர் சிவாஜி. அவரை பார்த்து நிறைய நடிகர்கள் இந்த பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். மேலும் தினமும் வீட்டில் அசைவ உணவு சமைக்க சொல்லி , 10 பேருக்கான சாப்பாட்டுடன் தான் செல்வாராம். எல்லாருடனும் சாப்பாடை பகிர்ந்து சாப்பிடுவார்.

அதே போன்று யார் உதவி என்று சிவாஜியிடம் சென்றாலும் யோசிக்காமல் உதவி செய்ய கூடியவர் இவர். மேலும் உதவி பெறுபவர்களிடம் இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம், அது தான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி என்று கேட்டு கொள்வார். இதனாலேயே சிவாஜி செய்த பல உதவிகள் வெளியில் தெரியாமலேயே போயிருக்கிறது.

சிவாஜிக்கு இருந்து பெயர் மற்றும் புகழுக்கு அவரை தேடி நிறைய பதவிகள் வந்திருக்கின்றன. அவர் நினைத்திருந்தால் தமிழக அரசியலில் எப்படிபட்ட பதவியையும் கேட்டு வாங்கியிருக்கலாம். ஆனால் சிவாஜி அதற்கு எல்லாம் ஆசை படவே இல்லையாம். என்றுமே எளிமையாக வாழவே விரும்பியிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” என்றார் மணி.

- Advertisement -

Read more

Local News