Thursday, April 11, 2024

நடிகர் சித்தார்த் – நடிகை அதிதி ராவ் ஹைதாரி காதல் உறுதியானது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே சித்தார்த் – அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கேற்றாற் போல் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இடங்களில் சுற்றி திரிந்த போட்டோக்களும் வெளியானது.

அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் விழாவில்கூட இவர்கள் இருவரும் ஜோடியாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்தே இவர்களுடைய காதல் உண்மைதான் என்ற பேச்சு திரையுலகில் பேசப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் அதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.

இந்நிலையில் சித்தார்த் அதிதி ராவின் பிறந்த நாளான இன்று அவருக்குப் பிறந்த நாளை சொல்லும் பொருட்டு அந்த வாழ்த்தில் தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லியுள்ளார் நடிகர் சித்தார்த்.

தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் “எனது இதய ராஜகுமாரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டு தாங்கள் ஜோடியாக இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார் நடிகர் சித்தார்த். இதன் மூலம் அவர்கள் இருவரின் காதலும் தற்போது உறுதியாகி இருக்கிறது.

நடிகர் சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்தானவர். இதன் பின்பு நடிகை சமந்தாவுடன் காதல் ஏற்பட்டு பிரிந்தார். இப்போது இந்தக் காதலாவது ஜெயிக்குமா என்று பார்ப்போம்..!

- Advertisement -

Read more

Local News