நடிகர் ரஜினிகாந்த் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலையிலும் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த 5 நாட்களாக நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிடட் பல்வேறு இடங்களில் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்றது.
இதற்காக திருவண்ணாமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.இந்த தகவல் பரவ சுற்றுவட்டார பகுதி மக்கள் ரஜினிகாந்தை சுற்றி வளைத்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.