பேரனின் காதணி விழாவில் ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் ஆகும். இதையடுத்து குழந்தைக்கு பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழா   நடைபெற்றது.

விசாகனின் குலதெய்வமான சூலூர் மீனாட்சி அம்மன் கோயிலில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பெயர் சூட்டுதல் மற்றும் காதணி விழாவில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகன் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.   பேரனின் காதணி விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்று ரஜினிகாந்த் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கார் மூலம் அவர் சூலூர் புறப்பட்டுச் சென்றார்.

பிறகு காதணி விழாவில் பங்கேற்றார்.