Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

சிறுவனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய நடிகர் ராகவா லாரன்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புதுக்கோட்டை மாவட்டம், குருக்குலையாபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவர், தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் போது, “என் ஊர் மக்கள் குடிநீருக்காக கடுமையாக சிரமப்படுகின்றனர். ஒருவேளை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்து தரப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும்” என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வீடியோவை பார்த்த பிறகு, நடிகர் ராகவா லாரன்ஸ் உடனே தனது அறக்கட்டளை நிதியில் இருந்து குருக்குலையாபட்டியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைத்து கொடுத்தார். அந்த பிளான்டை நேற்று ராகவா லாரன்ஸ் நேரில் சென்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாற்றம் அமைப்பின் மூலம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இதில் எந்த அரசியலும் இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாம் ஒரு நல்ல காரியம் செய்தால் அதிலிருந்தே மகிழ்ச்சி கிடைக்கும். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன்” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News