தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளார் பிரபு தேவா. “காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். 30 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது, “மைக்கேல் முசாசி” என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக, இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நடிகர் பிரபுதேவா, தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளார். பூஜை முடிந்ததும், கோவிலில் இருந்து வெளியே வந்த பிரபுதேவாவுடன், அவரது ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.