Friday, April 12, 2024

விஷாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் நடிகர் பிரபு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநரான A.வினோத்குமாரின் இயக்கத்தில் விஷால் தனது அடுத்தப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தில், நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே தாமிரபரணி’, ‘ஆம்பள’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படங்களில் இடம் பெற்றிருந்த விஷால் – பிரபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் விஷால்-பிரபு இந்தப் படத்திற்காக இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்காக இளைய திலகம் பிரபு தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லம்மாகி அழகாக இருக்கிறார்.

இந்தப் படத்தில் விஷாலின் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படத்தை நடிகர்கள் ரமணா – நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்கள். 

- Advertisement -

Read more

Local News