“பிரதீப் ரங்கநாதன் இப்படி செய்யலாமா?”: ஆதங்கப்பட்ட பார்த்திபன்!

கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து  இயக்கிய லவ் டுடே பெரும் வெற்றிபெற்றது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் ‘பக்காவா பேசிட்டிருந்த நீ பார்த்திபன் மாதிரி பேசுற’ என்று ஒரு வசனம் வரும்.

இதுபற்றி தற்போது ஒருபேட்டியில் பேசிய பார்த்திபன் ‘படத்தில் அந்த வசனத்தை கேட்டதும் நானும் மற்றவர்கள் போல் சிரித்துவிட்டேன். ஆனால், என்னை அவர் பைத்தியம் என சொல்லி இருப்பது அப்புறம்தான் புரிந்தது. அவர் ஏன் அப்படி வசனம் வைத்தார் என்பதற்கு பின்னால் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது.

அவர் கோமாளி படம் எடுத்த போது என்னிடம் அசோசியட் இயக்குனராக வேலை செய்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அது என்னுடைய கதை எனக்கூறி, ரைட்டர்ஸ் சங்க தலைவர் பாக்கியராஜை அணுகினார். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து கிருஷ்ணமூர்த்தி கதையும் அது போலவே இருந்ததால் அவருக்கு ரு.10 லட்சம் இழப்பீடு வாங்கி கொடுத்தார் பாக்கியராஜ். அந்த கோபத்தில்தான் பிரதீப் அப்படி வசனம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்” என்றார்.

மேலும், “எனக்கு லவ் டுடே படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்ததும் அவரை பாராட்டி ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பினேன். இது என்னுடைய பக்குவம். எதிர்காலத்தில் அந்த பக்குவம் பிரதீப்புக்கும் வரும் என நம்புகிறேன்’ என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.