Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

தன்மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை உடைத்த நடிகர் நிவின் பாலி… எனக்கு துணைநின்ற அனைவருக்கும் நன்றி என பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவரங்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால் அம்பலமாக்கப்பட்டது. அதன் பின்னர் பல நடிகைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, தன்னை பாலியல் தொல்லை செய்ததாகக் கூறிய பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்பெண் யார் என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், அவரை சந்தித்ததே இல்லை என்றும் நிவின் பாலி கூறியுள்ளார்.

மேலும், குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்த நாளில் அவர் துபாயில் இல்லை, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இதனால், நிவின் பாலி மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டில் நம்பத்தகுந்த எந்த ஆதாரங்களும் இல்லை என போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில், பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறிய இடத்தில் நிவின் பாலி இல்லை, அவரது பயண விவரங்கள், க்ரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, “எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. எல்லா அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என்று நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News