Touring Talkies
100% Cinema

Wednesday, October 8, 2025

Touring Talkies

“நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிக்கிறேன்…” – காத்திருக்கும் நடிகர் மோகன்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1980-களில் இயக்குநர்களின் ஹீரோவாக இருந்த நடிகர் ‘மைக்’ மோகன் தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

அவர் கடைசியாக நடித்த ‘சுட்ட பழம்’ திரைப்படம் 2008-ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்பு அவர் தமிழில் நடிக்கவே இல்லை.

“மோகன் ஏன் நடிக்கவில்லை..?” என்று கேட்டு தமிழகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியபடியே உள்ளனர்.

இது குறித்து சமீபத்தில் அவரிடத்தில் கேட்டபோது, “நான் நடிக்க மாட்டேன்னு சொல்லவே இல்லையே.. எனக்குப் பொருத்தமான.. நல்ல கேரக்டர் வந்தால் நிச்சயமாக நடிப்பேன். கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார்கூட கேட்டாங்க. ஆனால் அந்தக் கதாபாத்திரங்கள் எனக்குப் பிடிக்கலை. அதனால் நடிக்கவில்லை. எனக்குப் பொருத்தமான கேரக்டர் கிடைக்கட்டும். நிச்சயமாக நடிப்பேன்..” என்று உறுதிபட சொல்லியிருக்கிறார் நடிகர் மோகன்.

- Advertisement -

Read more

Local News