தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் ‘அதிசயபிறவி’ படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் கிங்காங்.

இவரின் மகளுக்கு வரும் ஜூலை 10ம் தேதி சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது.
இதையொட்டி நடிகர் கிங்காங், திரையுலகில் இருப்பவர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் திருமண அழைப்பிதழ் வைத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.