Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

நடிகர் ஜெயராமின் இரட்டை ஆழ்வார்க்கடியான்கள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்’ நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி என முன்னணி கதாபாத்திரங்களுக்கும் ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சுந்தர சோழர் என கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களுக்கும் என பிரபல நட்சத்திரங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்தார் இயக்குநர் மணிரத்னம். படத்தின் வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணம்.

மேலும் வரலாற்று புனைவு நாவல் என்பதால் அந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொருவரின் தோற்றத்தையும் மிகச் சிரத்தையாக வடிவமைத்திருந்தார் மணிரத்னம்.

இதில் சீரியஸாக செல்லும் கதைக்கு சற்றே ரிலாக்ஸ் அளிக்கும்விதமாக படத்தில் இடம் பெற்றிருந்த ஜெயராம் நடித்த ஆழ்வார்க்கடியான் நம்பி’ கதாபாத்திரம் நகைச்சுவையாக அமைந்திருந்தது.

குடுமி வைத்த கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்தில் ஜெயராம் நடித்திருந்தார். அதேசமயம் இவரது கதாபாத்திரத்திற்காக வேறு ஒரு கெட்டப்பை முதலில் மணிரத்னம் உருவாக்கி வைத்திருந்தார் என்கிற விஷயம் தற்போது நடிகர் ஜெயராம் மூலம் வெளியாகி உள்ளது.

அப்படி உருவாக்கப்பட்ட ஆழ்வார்க்கடியான் நம்பி’யின் இன்னொரு தோற்றத்தையும் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.

படத்தில் இடம் பெற்றுள்ள தோற்றத்தைவிட இது இன்னும் இளமையாக இருப்பதாகவும் படத்தில் நடித்த ஹீரோக்களின் கதாபாத்திரங்களுக்கு சரிசமமாக இருப்பதாகவும் தோன்றுகிறது. இதனால்தான் கடைசி நிமிடத்தில் மணிரத்னம் கெட்டப்பை மாற்றியிருக்கிறார் போலும்..!

- Advertisement -

Read more

Local News