‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக நடிகர் தனுஷ் நீண்ட தலைமுடியும், தாடியும் வளர்த்து வந்த நிலையில் இன்று திருப்பதில் மொட்டையடித்து தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.
நேற்று காலை திருப்பதி சென்ற நடிகர் தனுஷ் மொட்டை அடித்து பின்பு சுவாமி தரிசனம் செய்தார். அவரது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தனுஷ் மொட்டை அடித்து, மாஸ்க், தொப்பி அணிந்திருந்த போதிலும், ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு புகைப்படங்களை எடுத்துள்ளனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more