மறைந்த கவியரசர் கண்ணதாசன் குறித்து, அவரது மகன் அண்ணாதுரை சமீபத்தில் சில நினைவுகளை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
“அப்பாவுக்கு பாடலாசிரியராகத்தான் வரவேண்டும் என்கிற திட்டம் இல்லை. எப்படியாவது திரைத்துறைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.
17 வயதில் திரை ஒளி என்கிற இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.. கவிதைகள் எழுதி இருக்கிறார்.
திரைத்துறையைப் பொறுத்தவரை, சந்திரமோகன் என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டு, நடிகராகத்தான் வாய்ப்பு கேட்டு வந்தார்.
ஆனால் வசனம் எழுத வாய்ப்பு வந்தது. அந்த பணியை மேற்கொண்டார். அந்த நிலையில், வசனம் எழுத ஆரம்பித்தார். அப்படி வாய்ப்பு கேட்டு ஒரு நிறுவனத்துக்குச் செல்லும்போது மேனேஜர் வெங்கடசாமி, ‘வசனம் எழுத பலர் இருக்கிறார்கள்.. பாடல் எழுதத்தான் ஆட்கள் குறைவாக உள்ளனர். ஆகவே பாடல் எழுது’ என்று சொல்லி, இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாவிடம் அழைத்துச் சென்றார்.
அப்படி அவர் எழுதிய, ‘கலங்காதிருமனமே..’ பாடல் தான் அப்பாவின் முதல் திரைப்பாடல்” என்று பலருக்கும் தெரியாத விசயங்களை பகிர்ந்துகொண்டார் அண்ணாதுரை கண்ணதாசன்.
பின்னாட்களில் கண்ணதாசன், சில திரைப்படங்களில் தோன்றி இருக்கிறார். ஆனால், ‘நடிகர் சந்திரமோகன்’ என்ற பெயர் காற்றோடு போய்விட்டது!
விசித்திரம்தான்!
.