மோகன்லாலுக்கு அஜித் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

நடிகர் அஜித்குமார் படத்தில் நடிக்கும் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் உலகம் முழுவதும் பைக் பயணங்களை மேற்கொள்வார் என்பது தெரிந்த விசயம்.  தற்போது அரபு நாடுகளில் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். அது குறித்த போட்டோ சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் துபாய் புஜ் கலிபா பகுதியில் பைக் பயணம் மேற்கொண்டிருந்தார்.  இங்கு  மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வீடு உள்ளது. அவரும் தற்போது அங்கே இருக்கிறார்.

இந்தத் தகவலை அறிந்த அஜித், அப்போது பிரபல தொழிலதிபர் சமீர் ஹம்சா என்பவருடன் இணைந்து மோகன்லாலின் வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்தார்.

இந்த சந்திப்பை எதிர்பாராத, மோகன்லால், இன்ப அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்து உள்ளார்.

இருவரும் சந்தித்த புகைப்படம்,  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.