நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இது ஒருபுறமாக இருக்க, அவருக்கு விருப்பமான கார் ரேஸிங் போட்டிகளிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில், அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ குழு மூன்றாவது இடத்தைப் பெற்று சாதனையைப் படைத்தது.

தற்போது இத்தாலியில் நடைபெறும் ஒரு போட்டியிலும் அவர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். இத்தாலியின் Mugello Circuit என்ற இடத்தில் நடைபெற்ற 12எச் ரேஸில் அஜித் குழு கலந்து கொண்டது. இந்த போட்டியில், GT992 பிரிவில் அஜித் குழு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் அஜித்தின் இந்த தொடர் வெற்றிக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.