2009ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளியான ஈரம் திரைப்படத்தில், நடிகர் ஆதி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, மக்களின் மனதில் இடம்பிடித்தார். இந்த திரைப்படம் இயக்குநர் அறிவழகனுக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, நகுல் நடித்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடித்த பார்டர், குற்றம் 23 போன்ற படங்களை அறிவழகன் இயக்கினார்.
தற்போது ஈரம் திரைப்படத்திற்குப் பிறகு, ஆதி மீண்டும் அறிவழகன் இயக்கும் சப்தம் படத்தில் நடித்துள்ளார். இது ஒரு ஹாரர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டு, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சப்தம் திரைப்படம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.