Friday, September 20, 2024

பெண் குழந்தையை தத்தெடுத்த அபிராமி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்து பிரபலமான அபிராமி,  ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அன்னையர் தினத்தையொட்டி அபிராமியும், அவரது கணவரும் பெற்றோர் ஆனதாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிராமி வெளியிட்டுள்ள பதிவில், “நானும், ராகுலும் தற்போது கல்கி என்ற பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். எங்கள் மகளை கடந்த வருடம் தத்தெடுத்தோம். இது எல்லா வகையிலும் எங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நான் ஒரு புதிய தாயாக அன்னையர் தினம் கொண்டாடும் பாக்கியம் பெற்றுள்ளேன். எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும்” என்று கூறியுள்ளார். அபிராமிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News