Tuesday, July 2, 2024

ஆண்ட்ரியாவால் இயக்குநர் அமீர் பட்டபாடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமீரின் பருத்திவீரன் சர்ச்சை பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பலரும் அமீருக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கவுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்தது பற்றிய சுவாரஸ்யத்தை அமீர் பகிர்ந்துள்ளார்.

வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ராஜன் கேரக்டரில் அமீர் நடித்திருந்தார். கேமியோ ரோலாக 20 நிமிடங்கள் மட்டுமே வரும் ராஜன் கேரக்டர் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்திருந்தது. இதனால் அமீர் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அந்த கேரக்டர் குறித்து பேசிய அமீர், “முதலில் வெற்றிமாறன் என்னை சந்தித்து நடிப்பது குறித்து கேட்டார். வெற்றிமாறனுக்காக நான் வடசென்னை படத்தில் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாலும், ஆண்ட்ரியா தான் எனக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றதும் ஷாக்காகிவிட்டது. ஆண்ட்ரியா என்னைவிட ஹைட் அதிகம்..  அப்படி இருக்கும் போது எப்படி நடிக்க முடியும்… இது செட் ஆகாது என வெற்றிமாறனிடம் கூறினேன்.

ஆனால், வெற்றிமாறன் தான் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார். இதில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கும் போது தான் எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது” என அமீர் கூறியது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News