இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இணைந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அகண்டா’ படத்திற்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளராக தமன் மீண்டும் இணைகிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156984.png)
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் தொடங்கப்பட்டது.
படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் முன்னரே ஒப்பந்தமான நிலையில், தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி பினி ஷெட்டி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ‘தி வாரியர்’ படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.