இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது இயக்கத் திறமையால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். அவரின் ‘பீட்சா’ திரைப்படம் மூலம் திரையுலகில் ஒரு தனித்துவமான இயக்குநராக கவனம் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து, ‘ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கி, தனது திரை மொழியை உருவாக்கி, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்தார்.
தற்போது, அவர் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ என்ற புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் 2025 மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இன்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு, ‘ரெட்ரோ’ படக்குழுவும், அவருக்கு சிறப்பு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளது.