“இளையராஜாவிடம் எனக்குப் பிடித்த விஷயம்:  ஏ.ஆர்.ரகுமான்

சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி பற்றியும், இசைஞானி இளையராஜா பற்றியும் பேசினார்.

“எனக்கு சைக்கிள் ஓட்றது ரொம்பப் பிடிக்கும். கேரளால இருக்கும்போது ஓட்டிருக்கேன். மியூசிக், மூவி பார்க்குறது தான் பொழுது போக்கு.

அது கூட எவ்ளோ நேரம் பாரக்க முடியும்…? டிராவல் பண்றது ரொம்பப் பிடிக்கும். வேற நாட்டுக்கு… வேற மாநிலத்துக்குன்னு போகும் போது நமக்குள்ள ஒரு வைப்ரேஷன் வரும். அது புதுப்புது எண்ணங்களை உண்டாக்கி நம்மை பிரஷாக்கும்.

ஒரு இசைக்கலைஞன்னா அவன் தண்ணி அடிப்பான். பொண்ணுங்களோட சுத்திக்கிட்டு இருப்பான்.

அவனுக்குக் கேரக்டர் இருக்காது என்கிற களங்கத்தை உண்டுபண்ணிட்டாங்க. இதனால இசைக்கலைஞனா அய்யய்யோ…. அந்தப் பக்கம் போகாதே… நீ பாடப் போறீயா… ஜாக்கிரதையா இரு. இளையராஜா சாருக்கிட்ட தான் பர்ஸ்ட் நான் பார்த்தேன். அந்த களங்கத்தை உடைத்தெறிந்தவர் இளையராஜா.

ஒரு சாமியார் மாதிரி உட்கார்ந்துக்கிட்டு இருப்பாரு.  தண்ணி அடிக்க மாட்டாரு, தம் அடிக்க மாட்டாரு. வேற கெட்டப்பழக்கம் கிடையாது. மியூசிக்னால அவ்ளோ ரெஸ்பெக்ட். அந்த விஷயம் இன்னும் என்னை பாதிச்சிட்டு. அவரைப் பார்க்கும்போது நடுங்குவாங்க. எதனாலன்னா அவரோட கேரக்டரனால. நான் வரும்போது அந்த ஸ்டூடியோவுல அவ்ளோ ரெஸ்பெக்ட்.

ஒரு மனுஷன்னு இருந்தா கலையை விட உள்ளுக்குள்ள இருக்குற ஸ்பிரிச்சுவல் எனர்ஜி… வந்து எந்த விஷயத்துல போனாலும் அதுல நல்லா பண்ணனும்… அந்த இன்டன்சன் இருக்கும்போது அதுல நல்லா ஆயிடுவோம்” என்றார்  ரஹ்மான்.