Tuesday, July 2, 2024

சேரன் இயக்கும் வெப் சீரிஸ் புதிய அப்டேட்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சேரன் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக ‘திருமணம்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ள அவர், அடுத்ததாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். சத்ய ஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து கிச்சா சுதீப் பிறந்தநாளன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சேரன், “ஆட்டோகிராப் போன்ற ஒரு மறக்க முடியாத பரிசை வழங்க காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தை ‘மை ஆட்டோகிராப்’ என்ற தலைப்பில் கன்னடத்தில் சுதீப் இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ‘ஜர்னி’ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் சேரன் இயக்கியிருந்தார். வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவுள்ளது. இதில் சேரன் விவசாயம் பற்றி அதிகம் பேசியிருக்கிறார். அது நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சேரன். சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த சீரிஸ் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை வெளியிடவுள்ளனர்.

 

- Advertisement -

Read more

Local News