Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் G.V.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம், ‘பேச்சிலர்’.
இந்தப் டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
வரும் 2021 டிசம்பர்-3-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, நேற்று சென்னையில் படக் குழுவினர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசும்போது, “கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக டில்லி பாபு சாரை ஒரு மதியத்தில் சந்தித்து கதை சொன்னேன். மூன்று மாதங்கள் வெயிட் பண்ணுங்கள் செய்யலாம் என்றார். அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது.
நாம் நினைத்ததை திரையில் கொண்டு வருவது கஷ்டம், தயாரிப்பாளர் எப்போதும் வேறெதாவது எதிர்பார்ப்பார்கள். இப்படத்திற்கு 100 நாட்கள் டப்பிங் செய்தோம், தயாரிப்பாளர்களுக்கு அது என்ன மாதிரியான உணர்வை தருமென்று தெரியும். ஆனால், எங்கள் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து, இப்படைப்பை உருவாக்கியுள்ளார். அவருக்கு நன்றி.
தேனி ஈஸ்வர் சார், படத்தில் பல காட்சிகளை தோளில் கேமராவை வைத்தேதான் படமாக்கி தந்தார். நாங்கள் கேட்டதை விடவும் சிறப்பாக செய்துள்ளார். ஒரு காட்சியில் 40 டேக் வரையிலும் போகும். அதை அவ்வளவு பொறுமையாக பார்த்து, கிரியேட்டிவாக எடிட் செய்துள்ளார் ஷான். அவருக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. ஒரு நண்பனாக அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது.
ஜீவி சார், ஒரு ஆக்டராக அவர் முகத்தில் ஒரு அமைதி இருக்கிறது, அது இயக்குநருக்கு வரம், இந்த மாதிரி படத்தில் அவர் முகத்தில் காட்டும் சின்ன, சின்ன உணர்வுகள்கூட படத்திற்கு அவ்வளவு பலமாக இருக்கும். படம் இத்தனை இயல்பாக இருக்க அவர்தான் காரணம். எல்லா நடிகர்களும் மிகச் சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள். திவ்யா இந்தப் படத்திற்காக 3 மாதங்கள் பயிற்சி எடுத்து நடித்தார். இந்தப் படம் அவர் வாழக்கையில் முக்கியமானதாக இருக்கும். ஒரு அறிமுக நடிகையாக அற்புதமாக நடித்திருக்கிறார். சித்துவைதான் நான் அதிகமாக டார்ச்சர் செய்திருக்கிறேன். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு சிறப்பான பின்னணி இசையைத் தந்திருக்கிறார். அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்து, அழகாக உருவாக்கியுள்ளோம்…” என்றார்.