Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

நாகேஷ் காட்சியை காப்பாற்றி சிவாஜி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பைப் பற்றி சொல்லத்தேவையில். ஆனால் இருவரும் நடித்த ஒரு காட்சியில் அவரையே ஓவர் டேக் செய்து விட்டார் ஒரு நடிகர். அவர், நகேஷ்.

ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திருவிளையாடல், 1965 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும், சாவித்திரி பார்வதி ஆகவும் நடித்திருப்பார். சிவனின் திருவிளையாடல் என்று ஆறு பகுதிகளை கொண்டதாக இந்த படம் இருக்கும்.

இதில் ஒரு பகுதியில் தருமி என்னும் கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருப்பார். அந்த நாட்டின் மன்னனால் கவிதை போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பொன்னும் பொருளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும். ஏழைப் புலவனாக இருக்கும் தருமி சிவன் கோவிலில் சென்று இதுபற்றி சொல்லி புலம்புவார். அப்போது சிவனான சிவாஜி கணேசன் நேரடியாக தோன்றுவார்.

இவர்கள் இருவரும் நடிக்கும் இந்த காட்சியில் நாகேஷ் தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார். ரொம்ப சீரியஸ் ஆக நிற்கும் சிவாஜி அவர் எதிரே புலம்பி தவிக்கும் நாகேஷ். இன்று வரை இந்த காட்சியை பார்க்கும் பொழுது அதில் சிவாஜி கணேசன் இருக்கிறார் என்பதே பார்ப்பவர்களுக்கு மறந்து விடும். நாகேஷ் விட்டு கண்கள் அசையாத அளவுக்கு அவர் நடித்திருப்பார்.

இந்தக் காட்சி படமாக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த இயக்குனருக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டதாம். நடிகர் திலகத்தை நாகேஷ் நடிப்பில் ஓவர் டேக் செய்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் நாகராஜன் இதைப்பற்றி சிவாஜி கணேசனிடம் சொல்லியிருக்கிறார். மேலும் இந்த காட்சியை நீக்கிவிடலாம் என்று கூட பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் சிவாஜி ரசிகர்கள் ரசிக்க வேண்டியது நடிப்பைத்தானே தவிர ஹீரோவை இல்லை என்று கூறி அந்த காட்சியை வைக்க சொன்னாராம்.

- Advertisement -

Read more

Local News