Saturday, September 14, 2024

இயக்குனரே இல்லாமல் உருவான திரைப்படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா என்றாலே பலரது கூட்டு முயற்சிதான். அதிலும் இயக்குநர்தான் கேப்டன். அதனால்தான், சினிமாவை டைரக்டர் மீடியம் என்பார்கள். அவர் இன்றி ஓர் அணுவும் அசையாது.

ஆனால் இயக்குநரே இல்லாமல் ஒரு படம் உருவானது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா.. உண்மைதான்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ். பாரதிராஜா இயக்கிய “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தில் தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.

பிறகு படங்களை இயக்கவும் ஆரம்பித்தார்.

இந்த நிலையில், பிஸியாக இருந்த பாக்யராஜை சந்தித்த ராமகிருஷ்ண என்பவர், “எனது நண்பர் ஒரு திரைப்படத்தை  தயாரிக்கவுள்ளார். அதில் நீங்கள்  கதை எழுதி, நடித்து தர வேண்டும்” எனவும் வேண்டுகோள் விடுத்தார். அவரும் ஒப்புக்கொண்டு  அந்த படத்திற்கு ‘’பொய் சாட்சி’’என்று பெயர் வைக்கப்பட்டது.

இத்திரைப்படத்தை ராமகிருஷ்ணன் மற்றும் பாக்கியராஜ் இருவரும்  இயக்கியிருந்தனர். ஆகவே, யார் பெயரை  இயக்குனர் என்று குறிப்பிடுவது என்று தயாரிப்பாளருக்கு குழப்பமாகிவிட்டது. இறுதியில் இயக்குனர் பெயரே இல்லாமல் படம் வெளியாதாம்.

- Advertisement -

Read more

Local News