Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘சேஸிங்’ படத்தின் போஸ்டரை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார்.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆசியாசின் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் முனியாண்டி தயாரித்துள்ள திரைப்படம் சேஸிங்’.

இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன்,  பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா மற்றும் பலர்   நடித்துள்ளனர்.

தயாரிப்பாளரான  மதியழகன் முனியாண்டி இந்தப் படத்தில் வில்லனாக  நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார்  சண்டை காட்சிகளில்  டூப்  போடாமல்  நடித்துள்ளார்.

இசை – தஷி, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, வசனம் – பொன் பார்த்திபன்,  எழுத்து — இயக்கம்  k.வீரக்குமார்.

இப்படம் ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் 70 சதவீதம் மலேசியாவில் படமாக்கப்பட்டது.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டர் வீடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று வெளியிட்டார். படத்தின் போஸ்டர் வீடியோவை பார்த்தவர் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று படக் குழுவினரை வாழ்த்தினார்.

- Advertisement -

Read more

Local News