Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

தீபாவளிக்கு வெளியாகுமா சந்தானத்தின் ‘பிஸ்கோத்’..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மசாலா பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘பிஸ்கோத்’.

சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிசா நடித்துள்ள இந்தப் படத்தில் சவுகார் ஜானகி, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ள டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி, வரும் தீபாவளிக்கு இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தீபாவளிக்கு புதிய திரைப்படங்களை வெளியிடுவது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே நடக்கின்ற பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை  என்றாலும் நிச்சயமாக தீபாவளிக்கு உள்ளே ஒரு சுமுகமான முடிவு ஏற்படும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்  ரவி.

- Advertisement -

Read more

Local News