Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில்கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்பப் பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும், குடும்பப் படங்களில் முழுக்க, முழுக்க நகைச்சுவையை முன்னிலைப்படுத்தியது குறைந்தேவிட்டது என்று கூறலாம்.

ஏனென்றால், குடும்பங்களில்தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அதைக் கதைக் களமாகக் கொண்டு நம்மை மகிழ்விக்க ஒரு கலகலப்பான குடும்பக் கதை ஒன்று தற்போது தயாராகவுள்ளது.

‘அறம்’ தொடங்கி சமீபத்திய ‘க/பெ.ரணசிங்கம்’வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கை கொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கோடப்பாடி ஜே.ராஜேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

இவருடன், ‘டோரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் முனீஸ்காந்த், ‘கலக்கப் போவது யாரு’ ராமர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இதர நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஆச்சரியமூட்டும் நடிகர்கள் பட்டியல் வெளியாகும் என்கிறது படக் குழு.

தயாரிப்பு நிறுவனம் – கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், கெளஷ்துப் எண்டர்டயின்மெண்ட், தயாரிப்பாளர் – கே.ஜே.ஆர் ராஜேஷ், தாஸ் ராமசாமி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கிஷோர் எம்.ராமலிங்கம், நிர்வாக தயாரிப்பாளர் – டி.ஏழுமலையான், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – மனோஜ் குமார், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – சி.ஆர்.மணிகண்டன், ஒளிப்பதிவாளர் – ஆர்வி, இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்கம் – ஏ.ஆர்.மோகன், ஆடை வடிவமைப்பு – கீர்த்தி வாசன், புகைப்படங்கள் – நரேந்திரன், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். இவர் ‘களவாணி’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி ‘இது வேதாளம் சொல்லும் கதை’ மற்றும் ‘பூமிகா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

‘மிடில் கிளாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News