Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..?!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையன்று தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ரவியின் 25-வது படம், ‘பூமி’. இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குநர் லட்சுமண் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

பூமி படத்தை கடந்த மே மாதமே வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படம் வெளியிடப்படவில்லை.

திரையரங்குகள் இதுவரையிலும் திறக்கப்படாத காரணத்தால், இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

ஆனால், அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓடிடிக்கு முன்பாக  நேரடியாக தொலைக்காட்சியிலேயே இத்திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ‘சன் தொலைக்காட்சி’ நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியிருப்பதாகக் கேள்வி. அதேபோல் ஓடிடி உரிமையையும் ‘சன் தொலைக்காட்சி’யின் துணை நிறுவனமான சன் நெக்ஸ்ட்’ நிறுவனமே கைப்பற்றியுள்ளதாம்.

இதனால் வரும் தீபாவளி தினத்தன்று முதலில் சன் தொலைக்காட்சியில் ‘பூமி’ படத்தை ஒளிபரப்பிவிட்டு அதன் பின்பு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இதனை வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News