தமிழ் திரைப்பட உலகின் இரு கண்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் விரைவில் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இந்த மல்டிஸ்டாரர் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஒரு விருது வழங்கும் விழாவின் போது, ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் பங்கேற்றனர். அதில் சவுந்தர்யா இந்த படம் குறித்து பேசும்போது கமல்ஹாசன் சார் தயாரிக்கும் ஒரு படத்தில் அப்பா ரஜினி நடிக்கப் போகிறார். சரியான நேரத்தில் அப்பாவே அவற்றை வெளியிடுவார் என்றார்.
மேலும், ஸ்ருதி ஹாசன் இருவரையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று நாங்களும் ஆசை படுகிறோம். எல்லோரையும் போலவே அந்த படத்திற்காக நாங்களும் காத்திருக்கிறோம் என்றார்.

