ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா சாப்டர் 1” படம் கடந்த 2ம் தேதி உலகளவில் வெளியானது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்தார். பழங்குடிகள் மற்றும் மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள் மற்றும் தொன்மம் போன்ற விஷயங்களையும் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தும், பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், “காந்தாரா சாப்டர் 1” படத்தை பாராட்டி பேசிய இயக்குனர் அட்லி, “காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான நாளில் நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பயணம் செய்து, தியேட்டரில் அந்த படம் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன்.
ஒரு இயக்குனராக இந்த மாதிரியான படத்தை உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால், ஒரு நடிகராகவும் ஹீரோவாகவும் அந்த திறமையை அவர் கொண்டு வந்துள்ளார். இந்த படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.