‘ஜாக்கி’ என்கிற படம் கிடா சண்டையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவையும், சக்தி பாலாஜி இசையமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பிரகபால் கூறியதாவது: மதுரைக்கு சென்றபோது கிடா சண்டை பந்தயத்தை நேரில் பார்த்தேன். அது தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த ஒரு விளையாட்டு என்று உணர்ந்தேன். பின்னர் அதுகுறித்த பல்வேறு தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். மதுரையில் தங்கி கதை எழுதினேன்.
இந்த படத்தில் கிடா சண்டைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். அதை உண்மைக்கு நெருக்கமாகவும், மிகுந்த நேர்த்தியுடனும் படமாக்கியுள்ளேன். திரையில் அந்தக் காட்சிகளில் கதாநாயகனுக்கும் கிடாவுக்கும் இருக்கும் பிணைப்பைப் பார்க்கும்போது பார்வையாளர்கள் உணர்வார்கள் என்றார்.