Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

‘தண்டகாரண்யம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2019 ஆம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்த ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் வெளியாகி விமர்சகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அதன் பின்னர், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படைப்பாக ‘தண்டகாரண்யம்’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ளனர். இப்படத்திற்கான இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ளார். பாடல்களை உமாதேவி, அறிவு, தனிகொடி ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘யு/ஏ’ சான்றிதழ் பெற்ற இந்த படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் நடிகர் தினேஷ் “சடையன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காவல்துறை அராஜகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூக அநீதிகளை வெளிப்படுத்தும் கதையாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்” எனும் வாசகத்துடன் வெளியான போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இப்படத்தில் இருந்து ‘காவ காடே’ என்ற பாடல் வெளிவந்தது. இதனையடுத்து, தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வ டிரெய்லரையும் வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News