தக் லைப் படத்துக்குப் பிறகு, சிலம்பரசன் அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இது வடசென்னை கதைக்களத்துடன் தொடர்புடைய, அந்த காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘வாடிவாசல்’ திட்டம் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணி அமைந்தது. இதற்கான புரோமோ படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் இடைவேளையால் படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின. எனினும், வெற்றிமாறன் பிறந்தநாளையொட்டி ‘எஸ்டிஆர் 49’ என்ற தலைப்பில் புரோமோ வீடியோ வெளியானது.
இதற்கிடையில், இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியபோது, வடசென்னை 2 விரைவில் உருவாகும் என அறிவித்துள்ளார்.