மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப், 2010 ஆம் ஆண்டு மம்மி & மீ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர் நடிகர் மோகன்லாலை வைத்து இயக்கிய நேரு திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.
தற்போது அவர் இயக்கியுள்ள புதிய படம் மிராஜ். இந்த படத்தில் ஆசிப் அலி மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர். கூமன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஜீத்து ஜோசப் ஆசிப் அலி கூட்டணி இணைந்துள்ளதுடன், அபர்ணா பாலமுரளி நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
விஷ்ணு ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைக்கதை ஜீத்து ஜோசப் மற்றும் ஸ்ரீநிவாஸ் அப்ரோல் இணைந்து எழுதியுள்ளனர். ஈ4 எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி மிராஜ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.