Friday, November 22, 2024

“தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரான திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்படும்” – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்படங்களில் கொஞ்சம் கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனங்களை வைத்து பல மசாலா திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் மொத்தமாக உடல் உறவு சம்பந்தமான காட்சிகளையும், அது தொடர்பான பச்சையான வசனங்களையும் வைத்து திரைப்படங்கள் வர ஆரம்பித்தது சில வருடங்களுக்கு முன்னால்தான்.

அந்த வரிசையில் ‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. ஆனால் இவைகளுக்கு எதிர்ப்பு வந்தபோது ‘இவையெல்லாம் அடல்ட் காமெடி படங்கள் என்ற பிரிவில் வரும்’ என்று சொல்லி சமாளித்தார் அந்தப் படங்களை இயக்கிய இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இந்த இரண்டு படங்களுமே சென்சாரில் பலவித கட்டுப்பாடுகள், காட்சி நீக்கங்களையும் எதிர்கொண்ட பின்பு திரைக்கு வந்து பெரும் வசூலை வாரிக் குவித்தன.

இந்த இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார், தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் கடந்த வாரம் ரிலீஸானது. டீசர் முழுக்கவுமே ஆபாச வசனங்கள் மற்றும் ஆபாச காட்சிகள் நிறைந்திருந்தன. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. திரைத்துறையை சேர்ந்தவர்களும் இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ, “இப்படி பட்டவர்த்தனமாக காமத்தைப் போதிக்கவா சினிமாவை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தோம்…” என்று கொதித்துப் போய் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு தடை விதிக்கப்படுமா என்ற நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “தமிழ் கலாச்சாரம் பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்…” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News