Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்பி வரவேண்டும் – மலையாள நடிகர் சங்கத் தலைவர் ஸ்வேதா மேனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு (அம்மா) சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள நடிகர் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவரானது இதுதான் முதன்முறை.புதிதாக பொறுப்பேற்றுள்ள ஸ்வேதா மேனன் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகள், மனகசப்புகள் காரணமாக சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறிப்பாக ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் வந்தால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைவேன். ஆனால், விலகியவர்களை சேர்ப்பது முக்கிய பணி அல்ல. அதைவிட முக்கியமான பணிகள் காத்திருக்கிறது. என்றாலும் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு நடிகர் சங்கத்தின் வாசல் திறந்தே இருக்கும் என்கிறார் ஸ்வேதா.

- Advertisement -

Read more

Local News