Touring Talkies
100% Cinema

Friday, August 15, 2025

Touring Talkies

நம்பர் ஒன் இடத்தை பிடித்த பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர்… எதில் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமூக வலைதளங்களில் அதிக பாலோவர்ஸ்களைக் கொண்ட பாலிவுட் நடிகைகளின் பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளவர்கள் ஷ்ரத்தா கபூர், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், தீபிகா படுகோன் மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ்களை பெற்றுள்ளனர். தற்போது, அவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் பாலோவர்ஸ் விவரங்கள் பின்வருமாறு:

ஷ்ரத்தா கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 93 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்கள் உள்ளனர். எக்ஸ் பக்கத்தில் 14 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும், பேஸ்புக்கில் 39 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர். பிரியங்கா சோப்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் 92.5 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும், எக்ஸ் பக்கத்தில் 27.2 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும், பேஸ்புக்கில் 54 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர்.

ஆலியா பட்டுக்கு இன்ஸ்டாகிராமில் 86 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும், எக்ஸ் பக்கத்தில் 21 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களும், பேஸ்புக்கில் 8.4 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர். தீபிகா படுகோனுக்கு இன்ஸ்டாகிராமில் 80 மில்லியன் பாலோவர்ஸ்களும், எக்ஸ் பக்கத்தில் 26 மில்லியன் பாலோவர்ஸ்களும், பேஸ்புக்கில் 47 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளனர். கத்ரீனா கைப்புக்கு இன்ஸ்டாகிராமில் 80 மில்லியன் பாலோவர்ஸ்களும், பேஸ்புக்கில் 33 மில்லியன் பாலோவர்ஸ்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News