கொரோனா லாக் டவுனில் சிக்கிக் கொண்ட படங்களில் ‘வலிமை’யும் ஒன்று. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அஜீத் வர மாட்டார் என்பதை உணர்ந்து அஜித் இல்லாத காட்சிகளை சென்னையிலேயே படமாக்கினார் அந்தப் படத்தின் இயக்குநரான வினோத்.
இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்க இருந்தது. இந்தப் படப்பிடிப்பில் அஜித்தும் கலந்து கொள்வதாக இருந்தார்.
‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடிக்கின்ற பல நடிகர்கள் மும்பை மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். மும்பை மற்றும் ஹைதராபாத்தில் திடீரென்று வைரஸ் தாக்குதல் அதிகமானதால் அவர்களில் யாருமே இப்போது படப்பிடிப்புக்கு வரத் தயாராக இல்லை. ஆகவே ‘வலிமை’யும் தள்ளிப் போகிறதாம்.