Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப் நடிக்கும் ‘இன்ஃபினிட்டி’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மென்பனி புரோடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘இன்ஃபினிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சாய் கார்த்திக் எழுதி, இயக்குகிறார். நட்டி புதுவிதமான தோற்றத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

நட்டியுடன் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), ‘மெட்ராஸ்’ சார்லஸ் வினோத், முருகானந்தம், ‘ராட்சசன்’ வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

மென்பனி புரோடக்‌ஷன்ஸ் சார்பாக மணிகண்டனும், ழகரலயா ஃபிலிம் புரோடக்‌ஷன்ஸ் சார்பாக பிரியதர்ஷினியும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இசை – டாம் ஜோ, ஒளிப்பதிவு – விஷ்ணு கே ராஜா, படத் தொகுப்பு – எஸ்.என்.ஃபாசில், ஸ்டண்ட் – சில்வா.

- Advertisement -

Read more

Local News