இலங்கைக்கு தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியான விஜித ஹேரத்தை சந்திப்பு கலந்துரையாடினர்.

நடிகர் ரவி மோகன் தற்போது கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கராத்தே பாபு’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் ரவி மோகன் நடித்து வருகிறார்.
இந்த சந்திப்பின் போது, ரவி மோகன் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜித ஹேரத்துடன், அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் திரைப்பட தயாரிப்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியதாகத் தெரிகிறது. “இத்தகைய முயற்சிகள் இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்தவும், எமது பாரம்பரிய கலாச்சாரத்தை உலகளாவிய கவனத்திற்கு கொண்டு செல்லவும் பெரிதும் உதவும்” என மந்திரி விஜித ஹேரத் தெரிவித்தார்.