தென்னிந்திய திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட் சினிமாவிலும் நடிகை ஸ்ரீலீலா என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது, அவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன் முதல் பாலிவுட் படம் வெளியாகும் முன்னே, ஒரு பெரிய தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பாபி தியோல் மற்றும் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவர, ஸ்ரீலீலா முன்னணி கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலீலா, பாலிவுட் உலகில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘‘உஸ்தாத் பகத் சிங்’’, ரவி தேஜாவுடன் ‘‘மாஸ் ஜதாரா’’, மேலும் தமிழில் ‘‘பராசக்தி’’ என்ற படத்திலும் ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.