பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக அறியப்படும் கங்கனா ரனாவத், தமிழில் ‘தாம்தூம்’ மற்றும் , தலைவி , ‘சந்திரமுகி-2’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு, மக்களவை உறுப்பினராக (எம்.பி.) பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்கனா, தனது திரைப்பட அனுபவங்கள் மற்றும் அரசியல் பயணத்தைப் பற்றி திறமையாகப் பேசினார். “அரசியலை நான் விரும்புகிறேன் என்று சொல்ல முடியாது. ஆனால், அது ஒரு சமூகப் பணி. ஆரம்பத்தில் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லையெனினும், தற்போது அது நிஜமாகவே நடைபெற்று வருகிறது.
மக்கள் பல்வேறு பிரச்சினைகளுடன் என்னிடம் வருகிறார்கள். சில பிரச்சினைகள் அரசால் தீர்க்கப்பட வேண்டியவையாக இருந்தாலும், என்னையே அதைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இது என்னை ஆச்சரியப்படுத்துகிறது,” என்றார் கங்கனா.பின்னர், “நீங்கள் பிரதமராக ஆசைப்படுகிறீர்களா? என ஒரு கேள்வி எழுப்பப்பட்ட போது, “அதற்கான தகுதி எனக்கு இல்லை. ஏனென்றால், சமூகப்பணி எனக்கு பின்னணியாக இல்லை. இதற்கு முன்பு நான் மிகுந்த சுயநல வாழ்க்கையை வாழ்ந்தேன். எனவே, அதுபோன்று எண்ணமே வரக்கூடாது” என உணர்வுப்பூர்வமாக பதிலளித்தார்.