1990-களில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் சரவணன். சில ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி இருந்த அவர், கார்த்தி நடித்த ‘பருத்தி வீரன்’ படத்தில் சித்தப்பா கதாபாத்திரத்தில் மீண்டும் திரையில் அறிமுகமானார்.அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சமீப காலமாக திரைப்படங்கள் வெப் சீரிஸ் என பிசியாக நடித்துவரும் சரவணன், தற்போது ஒரு வெப் சீரிஸில் கதாநாயகனாக நடித்துள்ளார். சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் “சட்டமும் நீதியும்”. இதில் கதாநாயகனாக சரவணன் நடித்துள்ளார். மேலும் நம்ரிதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த இணையத் தொடர் ஜூலை 18ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியிடப்பட உள்ளது. ‘சட்டமும் நீதியும்’ தொடருக்கான டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.