சினிமாவில் விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் இடம் எவராலும் பூர்த்தி செய்ய முடியாது என நடிகர் அருண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தற்போது, அருண் பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அஃகேனம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் ஆஸ்கர் குழுவில் இணைந்திருப்பது பெருமையளிக்கும் ஒன்று எனவும், சினிமாவில் விஜய், அஜித் போன்றவர்களின் இடம் எப்போதும் நிரம்பாதவையாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆஸ்கர் நிர்வாகக் குழுவால் நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, இயக்குநர் பாயல் கபாடியா, ஆடைகளுக்கான வடிவமைப்பாளர் மேக்சிமா பாசு, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 98-வது ஆஸ்கர் விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது.