சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சசிகுமார் தற்போது ‘பிரீடம்’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். கதைக்களம், தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர், அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்வதைக் குறித்ததாக அமைந்துள்ளது. இப்படம் ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தக் கதையின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில், ‘பிரீடம்’ படத்திலிருந்து ‘ஆராரோ ஆரிரரோ’ எனும் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பாடியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.