நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘வா வாத்தியார்’. கார்த்தி, இப்படத்தில் எம்ஜிஆர் ரசிகராக காவல்துறை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு பேண்டஸி கதைக் கதையாக உருவாகியுள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏற்கனவே 160 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இன்னும் சில பகுதிகள் படமாக்கப்படவேண்டியுள்ளதாம்.
இந்தக் கட்டத்தில், படத்திற்குத் திடீரென ஏற்பட்ட சில சிக்கல்களால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பிரச்னைகள் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து வருகிற செப்டம்பர் மாதத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.