Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

திரைத்துறையில் வெற்றிகரமாக 40வது ஆண்டில் அடியெடுத்து வைத்த நடிகர் சிவராஜ் குமார்… நெகிழ்ச்சி பொங்க வாழ்த்திய நடிகர் கமல்ஹாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவராஜ்குமார் திரைத்துறையில் தனது 40-வது ஆண்டு பயணத்தைத் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக்களையும், மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார் கமல் ஹாசன்.

இது குறித்து காணொலி மூலம் பேசும் போதே கமல் கூறியதாவது:சிவராஜ்குமார் எனக்கொரு மகனைப் போல்; அவருக்கு நான் சித்தப்பா. ராஜ்குமார் அண்ணா எனக்குக் காட்டிய அன்பு, எதிர்பாராத அளவுக்கு மிகுந்தது.

சிவான்னாவைப் பற்றிச் சொல்வதென்றால், இந்த 40 வருடங்கள் எப்படி பறந்து சென்றன என்பது எனக்கே புரியவில்லை. இன்று அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்து, தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது. எதிர்காலத்திலும் அவர் மேலும் சாதிப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News