Touring Talkies
100% Cinema

Thursday, June 5, 2025

Touring Talkies

எனது தந்தை மோகன் பாபுவின் ‘அசெம்பிளி ரவுடி’ படத்தை ரீமேக் செய்ய ஆசை – நடிகர் விஷ்ணு மஞ்சு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்திய திரைப்படமான ‘கண்ணப்பா’ வருகிற 27ஆம் தேதி வெளியாக உள்ளது. முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரலாற்றுப் பின்னணியில் சிவபக்தி அடிப்படையில் உருவாகி இருக்கிறது. 

இதில், கடவுள் சிவனை உளமாற பக்தியுடன் வழிபட்ட கண்ணப்பரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷ்ணு சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது தந்தையான மோகன் பாபுவின் எந்தொரு திரைப்படத்தையும் ரீமேக் செய்ய வாய்ப்பு கிடைத்தால், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றி பெற்ற ‘அசெம்பிளி ரவுடி’ படத்தையே தேர்ந்தெடுப்பேன் எனவும், ‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடெலா இந்த ரீமேக்கை இயக்கவேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்றும் விஷ்ணு தெரிவித்தார். இந்த ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News